search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்காச்சோள சாகுபடி"

    விருதுநகர் அருகே வீரச்செல்லையாபுரத்தில் மக்காச்சோள பயிர் காட்டு்பன்றிகளால் சேதம் அடைந்துள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே வீர செல்லையாபுரம் பகுதியில் விவசாயிகள் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். தற்போதுள்ள நிலையில் மக்காச்சோள சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வரை செலவாகும் நிலையில் விவசாயிகள் பெரும் சிரமத்தில் சாகுபடியை மேற்கொண்டுள்ளனர். மக்காச்சோளம் பயிரும் கதிர்விடும் நிலையில் உள்ளன.

    இந்நிலையில் அப்பகுதியில் உள்ள நிலங்களில் மக்காச் சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் வயல்களில் புகுந்து முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் வனத்துறை மூலம் காட்டுப்பன்றிகளால் பயிர்ச்சேதம் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நிலையிலும் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வரை கடன் பெற்று சாகுபடி செய்துள்ளோம்.

    தற்போது காட்டுப்பன்றிகள் பயிரை சேதப்படுத்தி விட்ட நிலையில் எங்களுக்கு வேறு என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணீர் வடிக்கும் நிலையில் உள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் சேதப்படுத்தப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மேலும் காட்டுப் பன்றிகளால் பயிர்கள் சேதப்படுத்தப்படுவதை தடுக்க வனத்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×